மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்.. 18 ஆண்டுகளுக்கு பின் சீர் வரிசையுடன் கிராம மக்கள் செய்த விநோத நிகழ்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 9:59 am
Frog Marriage - Udpatenews360
Quick Share

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்.. 18 ஆண்டுகளுக்கு பின் சீர் வரிசையுடன் கிராம மக்கள் செய்த விநோத நிகழ்வு!!

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்படி ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடம் அணிந்து குரும்பபாளையம் வீதியில் வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது.

தொடர்ந்து குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்பொழுது கூடி இருந்த பொதுமக்கள் மங்கள அரிசியை தூவி வாழ்த்தினார்.

பின்னர் மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஊரை சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று உள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து மூன்று கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த திருமண நிகழ்ச்சியில் முடிந்தவுடன் மழை வேண்டி குரும்ப்பாளையம் ஊரில் உள்ள துரை வீரசாமி கோவிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும்.

இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நடந்து வருகிறது.

Views: - 349

0

0