தமிழகத்தில் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு ரத்து? அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 11:10 am

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னையின் மெரினாவில் உள்ள நேதாஜி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்த நிலையில்,நேற்றைக்கும் இன்றைக்குமான மாதிரிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.இது மன நிறைவாகவே உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 9 ஆயிரம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது நிறைவைத் தருகிறது. மேலும்,இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது ஆறுதலான விசயமாக உள்ளது.

எனவே,தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது,முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.எனவே,கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது”,என்று தெரிவித்துள்ளார்.

  • rajinikanth increased his salary on jailer 2 எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?