காந்தியடிகள் நினைவு தினம்: கோவையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!!
Author: Rajesh30 January 2022, 2:58 pm
கோவை: காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி கோவையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் காந்தியடிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர். இந்த உறுதிமொழியை ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதானல் காவல் துறையினருக்கும் அமைப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
மேலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் “இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதனை காவல்துறையினர் அகற்றும் படி கூறினர். அதனைத் தொடர்ந்து இந்து என்ற வார்த்தை மற்றும் மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
0
0