தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் : ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 3:10 pm

அரியலூர் : தற்கொலை செய்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் விடுதியில் 12 ம் வகுப்பு படிந்து வந்த நிலையில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் தற்கொலை விவகாரம் மதமாற்றம்தான் காரணம் என பாஜக கூறி வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்திற்கு வந்து லாவண்யா பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பாஜக மாநிலத் துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜயப்பன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பாஜக சார்பில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!