வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி நடவடிக்கை

Author: kavin kumar
30 January 2022, 3:55 pm
Quick Share

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(38) என்பவர் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நகர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அங்கு சட்டவிரோதமாக சுமார் 30 கிலோ எடைகொண்ட ரூ 16,000 மதிப்புடைய அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 472

0

0