ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : பரிசலில் சென்று உற்சாகம்…

Author: kavin kumar
30 January 2022, 4:20 pm
Quick Share

தருமபுரி : ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், சிறு சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்நிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கிய நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிறுதோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிறு விதிக்கபட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். சுற்றுலாப்பயணிகள் பரிசல் சவாரி செய்தும் மீன் சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் அருவிகளில் குளிக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விதித்த தடை தொடர்ந்து நீடித்து வருவதால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றன.

Views: - 1278

0

0