பெங்களூருவில் இருந்து BMW கார் வாங்கி கஞ்சா கடத்தல் : தொழிலதிபர் போல் உலா வந்த வியாபாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 1:35 pm
Cannabis Suply - Updatenews360
Quick Share

யாரை நம்புவது எதை நம்புவது என்று தெரியாத அளவில் குற்றங்கள் வினோதமாக நடக்கின்றன. அந்த வகையில் மேம்பாலத்துக்கு அடியிலும் செடு புதர் மண்டிய இடங்களிலும் காலி கிரவுண்டுகளிலும் விற்க்கப்பட்ட கஞ்சா தற்ப்போது சொகுசு காரில் விற்க்கின்றனர்.

போதை பொருளை விற்ப்பனையை தடுக்க காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கோவையில் கஞ்சா விற்ப்போரின் கைது எண்ணிக்கை உயரவே கடும் நடவடிக்கை தொடர்ந்திருக்கின்றன.

கோவை சாய்பாபா காலனி மார்கெட் பகுதிகளில் கஞ்சா விற்ப்பதாக போலிஸுக்கு தகவக் வந்திருக்கின்றது. சாய்பாபா காலனி காவல் ஆய்வாளர் தமிழ் தலைமையிலான போலீசார் ரகசியமாக ரோந்து சென்றிருக்கின்றனர்.

அப்போது சாய்பாபா காலனி காய்கறி மார்கெட் பகுதியில் தனியா BMW கார் ஒன்று நிற்பதை போலீசார் பார்த்திருக்கின்றனர். விலை உயர்ந்த சொகுசு கார் தனியாக வெகு நேரம் நின்றிருந்த நிலையில் போலிஸ் சென்று விசாரித்திருக்கின்றனர்.

விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக நடந்துகொண்ட இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருக்கின்றன. உடனடியாக காரை போலீஸ் சோதனையிட்ட நிலையில் டிக்கியில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதனை பார்த்திருக்கின்றனர்.

உடனடியாக காருடன் இருவரையும் ஸ்டேசனுக்கு போலிஸ் இட்டு சென்றிருக்கின்றனர். போலீஸ் விசாரணையில் வீரசிவகுமார் , கார்த்தி இருவர் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன. இவர்கள் மீது முன்னதாக கஞ்சா விற்றதாக கோவையை காவல்நிலையங்களில் வழக்குகளும் நடந்துவருகின்றன.

இவர்களிடம் நடந்த விசாரணையில் வழக்கமான இடங்களில் கஞ்சா விற்பது கடும் கெடுபிடி ஆனதால் சொகுசு காரில் கஞ்சா விற்க முடிவு செய்து ஃபேன்சி நெம்பர் கொண்ட வண்டியை பெங்களூருக்கு சென்று வாங்கியிருக்கின்றனர்.

சொகுசு கார் ஃபேன்சி நெம்பர் என்றால் போலிஸ் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிகையின் அடிப்படையில் கார் வாங்கியிருக்கின்றனர். அதனை மீறி பிடிபட்டால் போலிஸிடமிருந்து தப்பிக்க வண்டியின் ஓனர் பெயரை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வந்திருகின்றனர்.

காரை நோட்டமிட்டதில் கஞ்சா பொட்டலங்கள் மட்டுமின்றி 2 லட்சத்து 40,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆந்திரா , தேனியிலிருந்து கஞ்சா வரவழைத்து விற்றிருக்கின்றனர்.

கஞ்சா விற்றே சொகுசு கார் வசதி வாட்டமாக வாழ்ந்துவருவது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் கஞ்சா சப்ளையர்களை கூண்டோடு பிடிக்க போலிஸ் திட்டமிட்டிருக்கின்றனர்.

சொகுசு காரில் வந்து கஞ்சா விற்ற கஞ்சா வியாபாரிகள் போலிஸாரால் பிடிபட்டது சாய்பாபா காலனி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியீருக்கின்றன.

Views: - 386

0

0