பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 2வது முறையாக வாகனத்திற்கு தீ வைத்ததால் அதிர்ச்சி!!
Author: Babu Lakshmanan30 June 2023, 2:06 pm
பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 2வது முறையாக வாகனத்திற்கு தீ வைத்ததால் அதிர்ச்சி!!
மதுராந்தகம் அடுத்த புக்கத்துறையில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மகன் நீலகண்டன் (வயது 35). இவர் பாரதி ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் நீலகண்டன் விளங்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன் 24ஆம் தேதி இவரது இருசக்கர வாகனம் அவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அடுத்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் தனது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாகவும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என படளம் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு அவர் வீட்டின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் எரிந்து நாசமானதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீலகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0
0