ரஜினி வீட்டில் நடந்த முக்கிய மீட்டிங்.. இரு குடும்பத்தினரின் சந்திப்பில் ஐஸ்வர்யா-தனுஷ் எடுத்த திடீர் முடிவு..!

Author: Vignesh
4 October 2022, 12:47 pm

தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போதைக்கு விவாகரத்து வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனுஷுக்கு திருமணம் செய்து கொடுக்க ரஜினிக்கு விருப்பம் இல்லாதபோதும் ஐஸ்வர்யாவின் பிடிவாதத்தால் திருமணம் செய்து வைத்தார்.

இரண்டு மகன்கள்

ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணம் கடந்த ஆண்டிலேயே சில மாதங்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். ஆனாலும் பிரச்சனை தீராததால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் இனி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

பெரும் அதிர்ச்சி

நள்ளிரவில் வெளியான அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிரலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரும் எவ்வளவோ சமரசம் பேசியும் இருவரும் தங்களின் முடிவுகளில் இருந்து இறங்கி வரவில்லை. 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.

தொடர்பு கொள்ளவில்லை

பிரிவதாக அறிவித்த பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்த போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்தனர். இருவரும் சண்டையும் போட்டுக்கொள்ளவில்லை. ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் ரசிகர்களுக்கு குட் நியூஸ் வந்துள்ளது.

ரஜினி வீட்டில் மீட்டிங்

அதாவது ஐஸ்வர்யாவும் தனுஷும் தங்களின் விவாகரத்து முடிவை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் இருவரும் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தனுஷ் – ஐஸ்வர்யா அல்லது அவர்களின் குடும்பத்தினர்தான் உறுதி படுத்தினால் தெரியும்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!