பொன்னியின் செல்வன்ல வர குட்டி நந்தினி இவங்கதான் !

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 12:32 pm
Baby Sara - Updatenews360
Quick Share

மணிரத்தினம் இயக்கத்தில், பெரிய நட்சத்திர கூட்டமே நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதும், எல்லோரும் அறிந்ததே. இந்த படத்தில் நந்தினி கேரக்டரில் மிக அசத்தலாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த நிலையில் இளவயது நந்தினி கேரக்டரில் பேபி சாரா நடித்துள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா அதன் பின்னர் ’சைவம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது நந்தினியாக நடித்த சாரா தற்போது டீன் ஏஜில் உள்ளதை மிகச்சிலர் மட்டுமே கவனித்து அவரது அழகை சமூக வலைத்தளங்களில் வர்ணித்து வருகின்றனர். கூடிய சீக்கிரம் சாராவை, ஹீரோயினாக பார்க்க வாய்ப்பு உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 591

0

0