பிஞ்சு கைகளில் துடைப்பம்… மாணவர்களை வைத்தே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் அவலம் ; சர்ச்சையில் அரசுப் பள்ளி நிர்வாகம்..!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 12:37 pm

விருதுநகர் ; சிவகாசி அருகே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.

பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிதுள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி வளாகத்தை பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்த நிர்பந்திக்கும் அவல நிலை தொடர்கிறது. பள்ளியின் ஆசிரியரே அருகில் நின்று கொண்டு மாணவ, மாணவியரை சுத்தம் செய்ய சொல்வதும், மாணவ, மாணவியர் துடைப்பத்தை கொண்டு வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

மாணவ, மாணவியரும் சளைக்காமல் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கட்டத்தில் நாம் வீடியோ எடுப்பதை கண்ட ஆசிரியை தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ மாணவியரை உடனே பணியை நிறுத்தி விட்டு வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 497

    0

    0