தற்காலிக ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan18 ஜனவரி 2023, 4:38 மணி
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Views: - 482
0
0