மனைவி, மகன், மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து தற்கொலை செய்த குடும்பத் தலைவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 11:14 am

திருவண்ணாமலை : செங்கம் அருகே மனைவி, மகன், மகள்களை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி.
இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில், அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் என மொத்தம் ஐந்து பேரையும் வெட்டிக் கொலை செய்த பழனி அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6) மகன் தனுஷ் (4), பழனி என 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?