குடும்ப தகராறில் முதல் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்…!! திருச்சியில் பயங்கரம்..!

Author: kavin kumar
14 February 2022, 6:49 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் குடும்ப‌ தகராறு‌ காரணமாக முதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு 23 வருடங்களுக்கு முன்பாக மோகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மணிவாசகம், மகாலட்சுமி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆனால் மணமுறிவு காணமாக மோகனிடமிருந்து செல்வி விவாகரத்து பெற்றுள்ளார். அதன் பின்னர் 18 வருடங்களாக செல்வம் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். செல்வியின் மகள் மகாலட்சுமிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மகளின் திருமணத்திற்காக செல்வின் சொந்த ஊரான மானாமதுரையில் உள்ள வீட்டை விற்றுள்ளார்.

அதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மகளின் திருமணத்தை நடத்தி உள்ளார். இதனை ஏற்காத செல்வம் தனது முதல் மனைவிக்கு பிறந்த கவியரசுக்கு திருமணம் செய்து வைக்காமல் உனது மகளுக்கு மட்டும் திருமணம் செய்து உள்ளாய் என்று அடிக்கடி கேட்டுள்ளார். இந்நிலையில் இந்த பேச்சு கைகலப்பாக மாறியுள்ள நிலையில் செல்வம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் தப்பி ஓடியவர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த வழக்கை திருச்சி விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 472

0

0