திமுக வேட்பாளர் மரணம் : வத்திராயிருப்பு 2-வது வார்டு தேர்தல் ரத்து

Author: kavin kumar
14 February 2022, 7:47 pm
Quick Share

வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்ததை அடுத்து, அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியின் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா என்பவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Views: - 902

0

0