பேக்கரியில் அடாவடி… ஊழியரை கண்முன் தெரியாமல் தாக்கிய போதை ஆசாமிகள் ; சைரன் சவுண்ட் கேட்டதும் எஸ்கேப்!!
Author: Babu Lakshmanan7 மே 2024, 9:41 மணி
பழனி அருகே பேக்கரியில் வேலை செய்யும் இளைஞரை அடித்து துவைத்த போதை ஆசாமிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள மேல்கரைபட்டி கிராமத்தில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு மூன்று இளைஞர்கள் புகுந்து கடையில் வேலை செய்யும் அரவிந்த்சாமி என்பவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மதுபோதையில் பேக்கரிக்கு வந்த இளைஞர்கள் கடையில் இருந்த நாற்காலிகளை எடுத்து தகராறு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!!
கடையில் வேலை செய்யும் அரவிந்த்சாமி என்பவர் இளைஞர்களை கடையைவிட்டு வெளியேறும்படி எச்சரித்துள்ளார். ஆவேசம் அடைந்த போதை ஆசாமிகள் கடைக்குள் புகுந்து அரவிந்த்சாமியை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். உடனடியாக அரவிந்த்சாமி கீரனூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வருவதை அறிந்த போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
புகாரைப் பெற்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட கல்துறை கிராமத்தைச் சார்ந்த விஜய், கவின், கார்த்தி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பேக்கரியில் புகுந்த போதை ஆசாமிகள் கடையில் வேலை செய்யும் நபரை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0