2,000க்கு கீழ் குறைந்த தமிழக கொரோனா பாதிப்பு… எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
14 February 2022, 8:00 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது, 1,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 951 ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,932 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது. இன்று 7,365 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 64 ஆயிரத்து 013 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 341 பேருக்கும், கோவையில் 305 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருப்பூரில் 93 பேருக்கும், சேலத்தில் 86 பேருக்கும், ஈரோட்டில் 98 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 828

0

0