தமிழகத்தில் கருத்து சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கு… என் மீது எறியப்பட்ட கற்களை வைத்து மாளிகை உருவாக்குகிறேன் : ஆளுநர் தமிழிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 8:20 pm
Tamilisai - Updatenews360
Quick Share

நான் மக்கள் கட்சி நான் மக்களோடு இருக்கும் கட்சிக்கான ஒரு தலைவர்
என பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்..

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியின் 9வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு 432 பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளையும் தங்க நாணயங்கள்
வழங்கினார்.

பின்னர் பேசுகையில் வாழ்க்கை வாழ்வதற்கு தான் அதையும் தாண்டி, சாதனை படைத்தால் மட்டுமே இந்த போட்டி உலகில் நாம் வாழ முடியும் கடலில் நீந்தும்போது தெலுங்கானா, பாண்டிச்சேரி, தமிழ்நாட்டில் இருந்து எந்த திமிங்கலம் வந்தாலும் அந்த இடையூறுகளை கடந்து நீந்தி செல்லவேண்டும், பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்ற அவர் நான் பல்வேறு சவால்களை சமாளித்துதான் இங்கு வந்துள்ளேன்.

இணையதளத்தில் பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்துள்ளேன் என் மீது எறியப்பட்ட கற்களைக் கொண்டு மாளிகையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்த அவர் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை பிரம்மாண்டமான கல்விக் கொள்கை இதைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

செல்போன்கள் நம்மை வீழ்த்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அதில் நல்லதை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில். பொறியியல் படிப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு பாரத தேசத்தில் கிடைக்கிறது நமது அரசு திட்டங்களை ஏற்படுத்தித் தருகிறது அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
என்றும். தமிழகத்தில் எனக்கு எல்லைகள் இல்லை இங்கு வந்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது கருத்து சுதந்திரம் எனக்கும் உள்ளது என்பதை அனைத்துக் கட்சி சகோதரர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவர், 7 பேர் விடுதலை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

அரசியல் கட்சியினர் 10% இட ஒதுக்கீடு 7 பேர் விடுதலையில் தங்களுக்கு வேண்டிய கருத்துகளை உச்சநீதிமன்றம் கூறினால் சரியான கருத்து என்றும் வேண்டாததை சொன்னால் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் நான் மக்கள் கட்சி, நான் மக்களோடு இருக்கும் கட்சிக்கான ஒரு தலைவர் என அவர் தெரிவித்தார்

Views: - 277

0

0