ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் போதை காளான்.. களைகட்டிய விற்பனை : போலீசாரை அதிர வைத்த பெண்..!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 11:59 am

ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் போதை காளாண்.. போலீசாரை அதிர வைத்த பெண் : கொடைக்கானலில் பயங்கரம்!!

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் என்ற மேஜிக் மஸ்ரூம் விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது.

குறிப்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்களை, இளைஞர்களை குறி வைத்து இந்த போதை காளான் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

பல லட்சம் ரூபாயும் புழங்கி வருகிறது. மேல்மலை பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள், அனுமதி அற்ற பகுதிகளில் போதை காளான் பேக்கேஜ் என்ற தங்கும் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து வெளி மாநிலங்களான கர்நாடகா, கேரளா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொரியர் மூலம் போதை காளான் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அருகில் உள்ள சிஎஸ்ஐ தங்கும் விடுதியில் பணியாளராக பணிபுரிந்த ஏசுதாஸ் மகன் சாலமோன் 53, இவரது மனைவி ஜெயந்தி 43, சாலமோனின் மகள் விக்டோரியா ராணி 28, மற்றும் சாலமோனின் மருமகன் அருண், சாலமோனின் தங்கை ஹெலன் மேரி ஆகியோர் போதை காளான் கொரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சாலமோனின் தங்கை ஹெலன் மேரியும், சாலமோனின் மருமகன் அருனும் வெளியூர்களில் தங்கி கொரியர் மூலம் வரும் போதை காளாணை வாங்கி அங்கு உள்ளவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.

இதை அடுத்து இவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் போதை காளானை பறிமுதல் செய்தனர். இவர்கள் கொரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்து பெற்ற ரொக்கத்தையும் கைப்பற்றினார்.

வெளியூர்களில் யார் யாருக்கு இந்த போதை காளான் விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொரியர் சர்வீஸ் மூலம் போதை காளான் விற்பனை செய்த சாலமோன் இவரது மனைவி ஜெயந்தி, இவரது மகள் விக்டோரியா ராணி ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவாகி உள்ள ஹெலன் மேரி மற்றும் அருணை தேடி வருகின்றனர். இந்நிலையில் இதே போதை காளான் விற்பனை வழக்கில் பள்ளங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் தங்கதுரை 32 ,மற்றும் இவரது உதவியாளர் நடராஜன் மகன் சுரேஷ் 56 ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்து 100 கிராம் போதை காளானை கைப்பற்றினர்.

ஒரே நாளில் போதை காளான் விற்பனை செய்த வழக்கில் ஐந்து பேர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர் இருவருக்கு வலை வீச்சு. இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?