கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : அமைச்சர் சேகர் பாபு கூறிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 7:35 pm

திருவள்ளூர் : தமிழகத்தில் இதுவரை 2,600 கோடி ரூபாய் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர தீமிதிவிழாவை இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் துவக்கி வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இறையன்பர்களின் பசியினை போக்குகின்ற ஆட்சியாக தமிழக முதல்வரின் ஆட்சி விளங்குவதாக பெருமிதம்
தெரிவித்த அவர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 125 கோடி செலவில்
தங்கும் விடுதி, போக்குவரத்து வசதி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் அதற்கான பணிகளை முதல்வர் விரைவில் துவக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழகத்திலிருந்து சிலைகள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட 852 சிலைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளதாகவும் இதுவரை 2,600 கோடி ரூபாய் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 40 ஆண்டுகளுக்கும் மேல் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் வரை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தீமிதி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?