எழுச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்… முதலீட்டாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி…!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 12:59 pm
Sensex Rate -Updatenews360
Quick Share

எழுச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்… முதலீட்டாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி…!!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால் இந்த வாரத்தின் ஏற்றம் இறக்கத்துடன் பங்குச்சந்தைகள் காணப்பட்டு வந்த நிலையில், இன்று எழுச்சியுடன் தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 591 புள்ளிகள் அதிகரித்து 65,525 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190 புள்ளிகள் உயர்ந்து 19,633 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

Eicher Motors, Hindalco, Tech Mahindra, TATA Steel, Bajaj Auto போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Power Grid, IndusInd Bank, Sun Pharma, Britannia, Dr Reddys Labs போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.60 புள்ளிகள் உயர்ந்து 95 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 40.85 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.95 புள்ளிகள் உயர்ந்து 20.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.63 புள்ளிகள் அதிகரித்து 13.23 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

Views: - 912

0

0