’50 வருஷா குடியிருக்கும் வீட்டை இடிச்சுருவோம்னு மிரட்டுறாங்க…நாங்க எங்க போறது’: ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த பழங்குடியின மக்கள்..!!

Author: Rajesh
21 March 2022, 1:21 pm
Quick Share

கோவை: கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை இடித்து விடுவதாக கூறி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை இக்கரை போலுவாம்பட்டி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் 15 குடும்பத்தினர் இக்கரை போலுவாம்படி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

மின் வரை நாங்கள் வசித்து வரும் குடியிருப்புக்கு மின் வரி, ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் வைத்துள்ளோம். இந்த நிலையில் எங்கள் குடியிருப்பின் அருகில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் நாங்கள் குடியிருக்கும் நிலம் அவருக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டை காலி செய்யச் சொல்கிறார்.

காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 751

0

0