நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: கோவையில் அரசியல் போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்!!

Author: Rajesh
27 January 2022, 10:01 am
Quick Share

கோவை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கோவையில் அரசியல் போஸ்டர்கள் மற்றும் அரசியல் சுவர் ஓவியங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் அரசியல் தொடர்பான சுவர் ஓவியங்கள் போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள், சுவரோவியங்கள் உள்ளிட்ட அரசியல் விளம்பரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 2152

0

0