நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலரிடம் விசாரணை… மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 8:28 pm
Pol
Quick Share

நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலரிடம் விசாரணை… மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும்.

இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார். ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள்.

மேலும் படிக்க: அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது : ராகுல் வீடியோவை போட்டு அண்ணாமலை தாக்கு!

போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.

இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மயங்கி விழுந்த காவலர் ஆறுமுகப்பாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

Views: - 248

0

0