அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது : ராகுல் வீடியோவை போட்டு அண்ணாமலை தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 7:57 pm
rahul
Quick Share

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது : ராகுல் வீடியோவை போட்டு அண்ணாமலை தாக்கு!

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நான் பிறந்ததில் இருந்து ஒரு சிஸ்டம் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் இந்த சிஸ்டம்.

என் பாட்டி பிரதமரா இருந்த போது எனக்கு இந்த சிஸ்டம் பற்றி தெரியும். நீதித்துறை, கல்வித்துறை, ராணுவம் என எல்லாவற்றிலும் பாருங்கள். 90 சதவீத பேரின் பங்களிப்பே இல்லை என ராகுல் பேசும் வீடியோ ஒன்றை அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: அங்கன்வாடியை டாஸ்மாக் பார் போல மாற்றி ரீல்ஸ்.. திமுக பிரமுகரின் மகன் கைது.. உடனே பிணை!

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டி, தனது தந்தை மற்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ராகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது!. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Views: - 131

0

0