அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் நுழைந்த போதை இளைஞர் : அலுவலக கண்ணாடிகளை உடைத்து அட்ராசிட்டி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 9:37 am
Tv malai - Updatenews360
Quick Share

கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்து இணை ஆணையர் அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி பிரகாரத்தில் ராஜ கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பேய கோபுரம் என நான்கு கோபுரங்கள் உள்ளது.

இதில் பேய கோபுரம் என்றுமே மூடப்பட்டு உள்ளது. மூன்று கோபுரங்களிலும் நுழைவாயிலில் பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் என சுழற்சி முறையில் பக்தர்களை சோதனை செய்து உள்ளே அனுப்புவது வழக்கம்.

தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் வழியாக பெங்களூரை சேர்ந்த அப்பு என்கிற போதை ஆசாமி தனது காதலியை அழைத்துக்கொண்டு கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளார்.

அவர் கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பக்தர்களை மிரட்டியபடி ஓடியதால் பக்தர்கள் பீதி அடைந்து நாலா புறமும் சிதறி ஓடியுள்ளனர்.

மேலும் கோவிலில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்த போதை ஆசாமி அங்கிருந்த கண்ணாடி கதவுகளை சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

இதனைக் கண்ட கோவில் அலுவலக ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

மேலும் கோவில் அலுவலகத்தில் உள்ள இணை ஆணையர் அறையில் இணை ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கத்திய வைத்துக் கொண்டு ஊழியர்களை போதை ஆசாமி மிரட்டி உள்ளார்.

பின்னர் காவல்துறையினர் வருவதை அறிந்த போதை ஆசாமி அப்பு தனது காதலியுடன் தப்பிக்க முயற்சி செய்த போது அலுவலக அறையில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் கால் முறிவு ஏற்பட்டு போதை ஆசாமி அப்பு கீழே விழுந்த போது சுற்றி வளைத்த காவல்துறை மற்றும் கோவில் ஊழியர்கள் பிடித்து சரமாரி தாக்குதல் நடத்திய பின்பு காவல்துறையினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் தப்பித்த காதலியை காவல் துறையினர் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 114

0

0