ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்த மூன்று வழக்குகளின் விசாரணை.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 12:51 pm
CV Shanmugam
Quick Share

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்த மூன்று வழக்குகளின் விசாரணை.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜர்!!

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுத்துள்ளது தமிழக அரசு. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணை இந்த மாதம் 23-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார்மங்கலம் மற்றும் வானூர் அதற்கு அடுத்து கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக சி.வி சண்முகம் மீது ஏற்கனவே மூன்று அவதூறு வழக்குகள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக மேலும் இரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணையை இந்த மாதம் 18ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் கடந்த முறை போடப்பட்ட மூன்று வழக்குகளில் விசாரணைக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் சீவி சண்முகம் ஆஜரானார்.

Views: - 706

0

0