அதிமுகவை தொட்டால் அவன் கெட்டான் என ஜெயக்குமார் கூறியது பாஜகவை அல்ல : கரு. நாகராஜன் ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 6:40 pm
Karu NAgarajan -Updatenews360
Quick Share

அதிமுகவை தொட்டால் அவன் கெட்டான் என ஜெயக்குமார் கூறியது பாஜகவை அல்ல : கரு. நாகராஜன் ட்விஸ்ட்!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சித்தி விநாயகர் துர்க்கை அம்மன் கோவிலின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வை பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு நாகராஜன், பாரதமாதா அவர்களின் சிலையை விருதுநகரில் கட்சியினுடைய சொந்த இடத்தில் வைத்த சிலையை அனுமதி இல்லை என்று போலீசார் அகற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

அதிமுகவை தொட்டால் அவன் கெட்டான் என ஜெயக்குமார் கூறியது பாஜகவை அல்ல : கரு. நாகராஜன் ட்விஸ்ட்!!

மீண்டும் நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம் மாநில தலைவரும் அந்த இடத்திற்கு செல்ல இருக்கிறார் சாலைக்கு போக்குவரத்திற்கு இடையூறாக அந்த சிலையை வைக்கவில்லை கட்சி அலுவலகத்திற்குள்ளே சிலையை அத்துமீறி எடுத்தது வேதனைக்குரியது கண்டிக்கத்தக்கது

அங்கே பாரத மாதா சிலை திருவள்ளூர் சிலை தமிழன்னை சிலை நிறுவப்பட உள்ளது. கலெக்டர் கூறியதை வைத்து எங்களது விவாதத்தையும் முன் வைப்போம்.

செந்தில் பாலாஜி எந்த குற்றம் செய்தாலும் விசாரணை காவலில் எடுக்கக்கூடாது நாங்கள் தேவ தூதர்கள் வானில் இருந்து வந்தவர்கள் என்று கூறியவர்களிடம் சட்டப்படி எல்லாம் ஒன்றுதான் என்பதை நீதிமன்றம் தீர்பாக வழங்கியுள்ளது

சட்டப்படி எல்லாம் ஒன்றுதான் ஒரு குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை சிறைச்சாலையில் போய் விசாரிக்க முடியவில்லை மருத்துவமனையில் போய் விசாரிக்க முடியவில்லை கண்கூடாக தெரிகிறது.

அவர் கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணை கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் ஆட்கொணர்வு மனுவை மட்டும் போடுவார்கள் இது போன்ற வேடிக்கை எல்லாம் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும்.

நீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருக்கிறது விசாரணை விரைந்து முடிக்க சொல்லி உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது பல்வேறு ஆவணங்கள் அவர் மறைத்திருக்கிறார். அந்த ஆவணங்களுடைய விளக்கங்கள் எல்லாம் அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிமுக பாஜக கூட்டணி என்பது தமிழகத்தில் செயல்படுகிற கூட்டணி தேசிய அளவில் தான் நாங்கள் கூட்டணி இங்கே கூட்டணி கிடையாது என்றால் அது சரி வராது. தேசிய அளவில் இருக்கிற தலைவர்களிடம் பேசிக் கொள்வோம் இங்கே பேச மாட்டோம் சொன்னாலும் சரி வராது பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு தெரியும் யார் பேசினாலும் அது வருத்தத்துக்குரியது. கூட்டணி தர்மத்தை முன்னிட்டு தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து பிறகு பேசி இருந்தால் அதுக்கு வருத்தப்படுகிறேன் .

திமுக 2024 தேர்தலில் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற சபதம் எடுத்துள்ளோமோ அந்த சபதத்தை நோக்கிய பேச்சுக்களையும் கருத்துகளையும் வெளியிட வேண்டும்

அதிமுகவை தொட்டா அவன் கேட்டான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது முதலமைச்சர் மு.க ஸ்டாலினை எங்களை அல்ல இவ்வாறு கூறினார்.

Views: - 229

0

0