மளிகை கடையில் பொருள் வாங்கிய பெண்ணை கீழே தள்ளிவிட்டு நகையை வழிப்பறி செய்த சம்பவம் : 24 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 9:51 pm

திண்டுக்கல் : பழனியில் பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து தப்பியோடிய 3 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர்.

பழனி அடிவாரம் இடும்பன் கோயில் ரோட்டில் வசித்துவருபர் தங்கவேலு, இவரின் மனைவி தங்கப்பொண்ணு வீட்டின் அருகே உள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்ட இளைஞர் கடையில் பொருட்களை வாங்குவது போல அந்தப் பெண்ணின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளான்.

திடிரென கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கபொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கநகையை பறித்துக்கொண்டு, கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பியோடியுள்ளான்.

தங்கப்பொண்ணு எழுந்து கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்த்தில் இருந்தவர்கள் திருடர்களை விரட்டியுள்ளனர். இதனிடையே அருகில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொரு இளைஞருடன் நகை பறித்துக்கொண்டு ஓடி வந்த நபர் தப்பி சென்றுள்ளான்.

இந்தநிலையில் நகையை பறிகொடுத்த தங்கபொண்ணு பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்துச் சென்றவர்களை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த தனபாண்டி, விக்னேஷ் மற்றும் சிவகிரிபட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 3 பவுன் செயினையும், குற்றத்துக்கு பயன்படுத்திய Honda Shine இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர வாகனம் ஆனது மதுரை அவனியாபுரத்தில் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிரிகள் மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!