ஒரு ட்வீட்…ரெண்டு அப்டேட்: ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ரசிகர்களை குஷிப்படுத்திய விக்னேஷ் சிவன்..!!

Author: Rajesh
2 February 2022, 4:30 pm
Quick Share

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளிட்டுள்ள ட்வீட்டில், ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வரும் 11.2.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 589

0

0