கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… ஆக்டிவ் MODEல் உளவுத்துறை? சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 10:53 am
Marina Police - Updatenews360
Quick Share

சென்னை: கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி சூறையாடலை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கடும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பலர் கூடவுள்ளதாக சமூக வளை தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் . இதனை தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடவாமல் தடுக்க சென்னை மெரினா கடற்கரையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 482

0

0