கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. தேதியுடன் வெளியான தகவல் : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 5:12 pm

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. இது வருகிற மே மாதம் 1ஆம் தேதி துவங்கும் இந்த திருவிழாவில் அழகர் மாலை 6 மணிக்கு அழகர்கோவிலிலுள்ள தோளுக்கினியாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அதனை தொடர்ந்து மே 2 ஆம் தேதி மீண்டும் அதே மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் மே 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு எழுந்தருளி, அதன் பின்னர் பக்தர்கள் படையுடன் அழகர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.

திருவிழாவின் தொடர் நிகழ்வாக, மே 4ஆம் தேதி செல்லும் வழியில் அங்குள்ள மண்டகப்படிகரையில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தண்ணீர்பாய்ச்சல் திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது.

பின்னர் இறுதி வைபவம் ஆன கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பக்தர்கள் புடைசூழ மே 5 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.15 க்குள் நடைபெறவுள்ளதக அழகர்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!