26ம் தேதி சர்வதேச இரும்பு மனிதன் போட்டி… தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ட்ராங் மேன் பங்கேற்பு!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 5:43 pm
Quick Share

கன்னியாகுமரி: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் ஸ்ட்ராங் மேன் கண்ணன் நாகர்கோவிலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரைகுட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இந்தியாவின் ஸ்டாரங் மேன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். ஏற்கனவே 3.5 டன் எடையுள்ள லாரியை கயிற்றில் இழுத்து சாதனை புரிந்துள்ளார்.

மேலும், டிராக்டர் டயர்களை தூக்கியும், நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸ் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா வீரரின் சவாலை ஏற்று 80 கிலோ எடையுள்ள குண்டை ஒற்றை கையால் தூக்கி சாதனை புரிந்து சவாலை முறியடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி சாதனை செய்தார்.

இந்நிலையில் கண்ணன் வரும் 26 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்த ரசில் நடைபெறவுள்ள சர்வதேச இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

100 கிலோ எடையுள்ள கற்களை அடுத்தடுத்து தூக்கியும், டிராக்டர் டயர் மற்றும் வெயிட்களை தோளில் சுமந்த படியும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். 85 கிலோ எடை பிரிவில் இவர் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளதால் இந்தியாவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பை பெற்று தருவேன் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

Views: - 723

0

0