அபராதம் விதிப்பதில் குளறுபடி… தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை… போலீசாரால் விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 4:47 pm
Quick Share

கரூரில் நவீன தானியங்கி கேமராவில் பதிவான வாகனத்திற்கு பதிலாக மற்றொரு வாகனத்திற்கு தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து காவலர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டன.

இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதில், அண்மைக்காலமாக கேமராவில் பதிவாகும் வாகனங்களுக்கு பதிலாக, வேறு வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில், சர்ச் கார்னர் பகுதியில் TN 47 BB 5326 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தலைக்கவசம் அணியாமல் சென்ற விதிமீறலுக்காக, TN 47 BB 5376 என்ற பதிவு எண் கொண்ட மற்றொரு வாகன உரிமையாளருக்கு தவறாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 311

0

0