புதர் மண்டிய குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசாரை குழம்பச் செய்த சம்பவம்… விசாரணை தீவிரம்…!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 2:39 pm

கரூர் அருகே புதர் மண்டிய குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மனவாசி சுங்ககேட் அருகே உள்ள கேபி குளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், புதர் மண்டிய குளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால், புதர் மண்டிய குளத்தில் தண்ணீர் சென்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் இருந்த பொருட்கள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கே கிடந்த ஒரு அடையாள அட்டையில் சதீஷ் s/o கோவிந்தன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் துரித விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் யார்?எந்த பகுதியை சேர்ந்தவர்? முன் விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல கோணத்தில் மாயனூர் போலீசார் விசாரணையை முடிக்கி உள்ளனர்.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!