கோவையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.. கோணியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நடவடிக்கை!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 9:13 am
Quick Share

கோவை : கோணியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி கோவையின் முக்கிய சாலைகளில் இன்று காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை, கோணியம்மன் கோவில் தேர் திருவிழா 01.03.2023-ம் தேதி நடைபெற இருப்பதால், பொது மக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில், சூழ்நிலைக்கேற்றவாறு, மேற்கண்ட பகுதிகளில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

  1. பேரூர் ரோடு

(i) பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது.

மாற்றாக,

பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

(ii) வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

  1. மருதமலை, தடாகம், ரோடு

(i) மருதமலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது.

மாற்றாக,

மருதமலை,தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னைய்யராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

(ii) உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 333

0

0