நீட் ரத்து கோரிக்கைக்கு பின்னால் மிகப்பெரிய சதி.. உதயநிதியை பதவிநீக்கம் செய்க ; கிருஷ்ணசாமி கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 8:10 pm
Krishnasamy - Updatenews360
Quick Share

ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- சந்திராயன் மூன்று நாளை நிலவின் தென் துருவத்தில் இறங்க இருக்கிறது இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய விஞ்ஞானிகள் முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். விஞ்ஞானிகளின் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மிக இளம் வயதில் செஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு செல்லும் பிரக்யானந்தாவுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள். கடந்த 17ஆம் தேதி சின்னதுரை என்ற மாணவரும், அவரது சகோதரியும் கொடூரமாக தாக்கப்பட்டு இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாணவர்கள் கல்வியை தான் கவனம் செலுத்த வேண்டும், தவிர வன்முறைகளில் ஈடுபடக் கூடாது.

இதே போல, நேற்று சென்னையில் குருநானக் கல்லூரியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் செய்து மாணவர்கள் ரகளை ஈடுபட்டுள்ளனர். இது போன்று தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடுகள் வன்முறைகளை கண்டித்து கல்வித்துறை தீவிரமான முடிவை எடுக்க வேண்டும். இந்த வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

ஆகஸ்ட் 23 அன்று நாங்குநேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். இதை காவல்துறை மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தீர்ப்பின் அடிப்படையில் போராட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும். வன்முறைக்கு எதிராக நடக்கக்கூடிய இதுபோல ஆர்ப்பாட்டத்தில் உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும்.

சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற செயல்களை எல்லாம் தட்டி கேட்பதை போராடுவதை காவல்துறையினர் தடுப்பதால்தான் அனுமதி தராத பட்சத்தில் வன்முறை காரர்களுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.

இருபதாம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக இளைஞரணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஆளுநரை மிகவும் தவறாக பேசியிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு முதல் கையெழுத்து நீட் விலக்குக்கு தான் என கூறியவர்கள், 28 மாதங்கள் கடந்தும் கையெழுத்து போடவில்லை. தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னார்கள் என்பதை மறுத்து தற்போது செயல்படுகிறார்கள். முன்பு என சொன்னார்கள் என்பதை மறுத்து விட்டு செயல்படுகிறார்கள். திமுக நீட்டை வைத்து ஓட்டு வாங்க சதி திட்டம் தீட்டுகிறார்கள்.

வயது வரம்பு எதுவும் இன்றி தவறான வார்த்தையை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை பேசியிருக்கிறார். இதற்காகவே இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது தமிழக மக்களை தூண்டும் செயலாக பார்க்கப்படுகிறது. அன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி பேசியது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

Views: - 227

0

0