தொடர்ந்து கிராமத்திற்குள் உலா வரும் கொம்பன்… தலைதெறிக்க துரத்திய ஒற்றை காட்டு யானை ; பறிபோன உயிர்..!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 11:11 am

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அப்பைய்யா (54). இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கிராமத்தை ஒட்டியுள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ரோஜா செடிகளை பயிரிட்டு இருந்தார். அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று அதனை பார்த்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து வெளியேறிய அப்பைய்யா தன்னுடைய விவசாய தோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அப்பைய்யாவை துரத்தி சென்று மிதித்து தாக்கி உள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த கிராம பொதுமக்கள், இது குறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், அவரது உடலை பார்த்து அவரது உறவினர்கள் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை வளாகத்திலும் அப்பைய்யாவின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காலை நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேடுமுத்துக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, ஜவளகிரி, செட்டிப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை ஏற்கனவே அப்பகுதியில் 2 விவசாயிகளை தாக்கி கொண்டுள்ளது. தற்போது மேலும் ஒரு விவசாயி இன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!