தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் தினம் : எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 12:35 pm

சேலம் : மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவ படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன் என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்தனர்.

அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் அருகே ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!