லியோ பட டிக்கெட் ரூ.450.. பிரபல தனியார் திரையரங்கில் பகல் கொள்ளை… அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 2:43 pm
Leo Ticket- Updatenews360
Quick Share

லியோ பட டிக்கெட் ரூ.450.. பிரபல தனியார் திரையரங்கில் பகல் கொள்ளை… அதிர்ச்சி வீடியோ!!

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் 19ஆம் தேதி லியோ திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இதனை கண்டு ரசிபதற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் லியோ படத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரும் 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள “லியோ” திரைப்படத்திற்கு கோவை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதிக்கபடுகிறது.

தொடக்க காட்சி காலை 9.மணிக்கும் கடைசி காட்சியாக அதிகாலை 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும். தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள், 1957 விதிகளின்படி 14A படிவம் “சி” உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.

திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நிலையில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்ளே நுழைதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும்,இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் (கேஜி) திரையரங்கில் லியோ படம் பார்பதற்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட கூடுதலாக 400 ரூபாய் வசூலிப்பதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 318

0

0