காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… சட்டம் ஒழுங்கில் மாநில அரசு கோட்டை விட்டுள்ளது : ஜிகே வாசன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2023, 10:01 pm
GK VAsan - Updatenews360
Quick Share

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… சட்டம் ஒழுங்கில் மாநில அரசு கோட்டை விட்டுள்ளது : ஜிகே வாசன் விமர்சனம்!

தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடியில் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது போதைப்பொருள் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது தொலைக்காட்சி பத்திரிக்கை செய்திகளே இதற்கு எடுத்துக்காட்டு சென்னையில் காரில் வேகமாக சென்று போதையில் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை முழுமையாக காவல்துறை தடுக்கவில்லை காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை இந்த அரசு தடுக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்என நான் கேட்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்வது அரசுடைய கடமை தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அவர்கள் அடக்க வேண்டும். தொடர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து நம்முடைய மீனவர்களை அச்சுறுத்துவதும் தாக்குவதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் இதில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் குறிப்பாக மத்திய அரசு அண்டை நாடுகளோடு கலந்து பேசி மாலத்தீவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா இருந்தாலும் மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தேர்தல் வாக்குறுதியை இரண்டரை வருடம் கழித்து நிறைவேற்றாத ஒரு அரசு பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் திமுக அரசு தான் இதை பார்த்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் எனவே பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்கு தமிழக ஆட்சியாளர்களை எதிராக அதிகரித்துக் கொண்டிருக்கும் இதில் மாற்று கருத்து கிடையாது.. கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் முறையாக சரியாக எல்லா தரப்பினருக்கும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வு பொருத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்றால் அகில இந்திய அளவில் மக்கள் மன்றத்திலே பெரும்பாலான உறுப்பினர்களை வைத்து உங்கள் முடிவை உங்கள் ஆட்சியில் எடுக்க வேண்டும் அந்த கனவு நினைவாக போவது கிடையாது.

நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்தின் மூலம் முழுமையான தீர்ப்பை பெற வேண்டும் இரண்டும் இல்லாமல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி மாணவர்களுடைய மனநிலையை குழப்புவது பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பை மாற்றக் கூடிய ஒரு நிலை ஏற்படுத்துவது ஒரு தவறான செயல் கல்வியிலே அரசியலை ஒருபோதும் புகுத்த கூடாது.

அதில் திமுக தொடர்ந்து செய்து கொண்டிருப்பது தவறான ஒன்று நீட் தேர்வு வேண்டும் வேண்டாம் என சொல்ல கூடிய கட்சிகள் வேறு அதற்கு மக்கள் மன்றமும் நீதிமன்றமும் இருக்கிறது

அந்த பிரச்சினைக்கு நாம் செல்ல விரும்பவில்லை நான் சொல்வது தொடர்ந்து நீர் தேர்வு அகில இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும் போது தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு படித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அன்றைய அதிமுக ஆட்சியிலே அதற்கு உண்டான சதவீதத்தை விசேஷமாக ஏற்படுத்தி ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உத்திரவாதத்தை கொடுத்தது இப்படிப்பட்ட சூழ்நிலையிலே இன்றைக்கு மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் என கூறிக்கொண்டு மாணவர்கள் பரீட்சை எழுதுபவர்களை குழப்புவது தேவையற்ற ஒன்று மாணவர்களும் பெற்றோர்களும் திமுக செய்கின்ற இந்த கல்வி அரசியலை ஏற்க்கமாட்டார்கள் குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள்.

தமாக தமிழகத்தில் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தினுடைய முதன்மைக் கட்சி பெரிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதிலே இங்கு மாற்று கருத்து கிடையாது.

மாலதீவுஅரசு மீனவர்களையும் படகையும் உடனடியாக விட வேண்டும். மத்திய அரசு உடனடியாக வலுவாக பேசி மீனவர்கள் மற்றும் படகை உடனடியாக விடக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்.

மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் சம்பந்தமாக கலந்து பேசி வரும் நாட்களிலே வெளியுரவுத்துறை அமைச்சகம் மூலம் இது போன்ற மீனவர் சங்கடங்கள் இருக்கக்கூடாது என உறுதியான நிலை ஏற்படுத்த வேண்டும்.

Views: - 226

0

0