பைக்கில் வீடியோ எடுத்தபடி சாகசப்பயணம்… எதிரே வந்த டேங்கர் லாரி ; கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 3:34 pm

கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள், மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டேங்கர் லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேர் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த நபர்களை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தயாளன்(19), சார்லஸ் (22) மற்றும் மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜான் (23) என்பதும், ஜான் தன்னுடைய உறவினர்கள் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்ததும், மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடியோ எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர்.

அப்போது, மேம்பாலம் அருகே அதே திசையில் சென்ற டேங்கர் லாரியை முந்தி சென்றபோது நிலைத்தடுமாறி டேங்கர் லாரி மோதி மூன்று பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய டேங்கர் லாரி ஓட்டுனரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!