கோவையில் பொதுமக்களுக்காக மதிய உணவு திட்டம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்!!

2 July 2021, 2:35 pm
SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை துவைக்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்தாலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும், கோவை உட்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, உரிபள்ளம்புதூர், கள்ளிபாளையம் வடிவேலம்பாளையம், நாதேகவுண்டன்புதூர், கிளியக்கவுண்டன் பாளையம் கள்ளிப்பாளையம் பகுதியில் ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி துவைக்கி வைத்தார்.

மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

Views: - 139

0

0