சவுக்கு சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.. இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை இதுதான் : வழக்கறிஞர் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 மே 2024, 8:56 காலை
savu
Quick Share

சவுக்கு சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.. இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை இதுதான் : வழக்கறிஞர் உற்சாகம்!!

சவுக்கு சங்கர்,பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மத்திய சிறையில் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் சட்டப்பணிகள் குழுவினர் சிறைக்குள் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க: விஷமாக மாறிய ‘சிக்கன் ஷவர்மா’…19 வயது இளைஞரை காவு வாங்கிய கொடூரம்..!!

அப்போது பேசிய அவர், சிறைக்குள் சவுக்கு சங்கர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டக் பணிகள் குழு ஆய்வுக்கு பின்பு சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைத்தும், உடலில் உள்ள காயங்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவுக்கான அறிக்கை நாளை காலை கிடைத்து விடும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென மனு அளித்திருந்தோம் அதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

எதற்காக போராடினமோ?? அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவு சிறைத்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் காவலர்கள் தாக்கப்பட்டு வலது கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது.

தாராபுரத்தில் விபத்து ஏற்பட்ட முதல் உதவி செய்ததும் , எந்த இடத்தில் காயங்கள் பட்டது என அதற்கான அறிக்கையை நம்ம பெற்றுள்ளோம்.

சிறைக்குச் செல்வதற்கு முன்பு இடது கையில் காயங்கள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிறைக்குச் சென்ற பின்பு வலது கையில் அவருக்கு அடிபட்டுள்ளது.

அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.மூன்று நாட்களாக இதை நாம் வலியுறுத்தி வருகிறோம். இப்போது அதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

யூ டியுபர் மாரிதாஸ் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார். ஒரு கட்சியைச் ( அதிமுக ) சார்ந்து இருப்பது தவறு கிடையாது. என்னுடைய தந்தை தவறியதால் அதற்காக நான் மொட்டை அடித்து உள்ளேன். அது தெரியாமல் அவர் பேசி உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆஜர் ஆனேன் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அது கிடையாது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தான் நான் வாதாடினேன்.

சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நீதிபதி முன்பு சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் நடந்த சம்பவம் அனைத்தும் வாக்குமூலமாக மதுரையில் கொடுத்துள்ளார்.

சவுக்கு சங்கர் உடலில் உள்ள காயங்கள் குறித்தான தகவல்கள் சட்டக் பணிகள் குழு அறிக்கையில் உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் தகவல்களும், அதற்கு மருத்துவர் பதில் அளிக்காத தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தையும் அவர்கள் செலுத்திக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளோம்.

ஆனால் இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைக்காக சவுக்கு சங்கரை அனுமதிப்பார்கள். அங்கு அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி அங்கு கிடைக்காவிட்டால் அதற்கு எதிராகவும் சட்டப்படி போராடுவோம் என தெரிவித்தார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 231

    0

    0