மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி… பரோலில் சென்று வந்த நிலையில் விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 6:08 pm

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை கிழித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆரோக்யசாமி. இவர் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று 23.02.2015 ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஐந்து முறைக்கு மேல் பரோலில் சென்று வந்த இவர், இன்று காலை தனக்குத் தானே பிளேடால் கழுத்தில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த மற்ற கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மதுரை மத்திய சிறை துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மூன்று தினங்களாக ஆரோக்யசாமி மன அழுத்ததில் இருந்தது தெரியவந்துள்ளது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!