‘எந்த மலை தடுத்தாலும்… 2024ல் கர்ஜிக்க போகும் நம்மவரே’… பாஜகவை வம்புக்கு இழுக்கும் ம.நீ.ம… கோவையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 8:00 pm

‘எந்த மலை தடுத்தாலும் 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் நம்மவரே!’ என பாஜகவுக்கு எதிராக கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கோவை வருகை தந்தார். கோவையில் நட்சத்திர ஹோட்டலில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். அதன்பின்னர், தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கமல்ஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரயில்நிலையம், டவுன்ஹால் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில், “யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமயமலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்… நம்மவரே! வருக வருக..!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போஸ்டரின் மூலம் பாஜக – மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இடையே யுத்தம் ஆரம்பித்துள்ளது.

  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 355

    0

    0