பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 11:48 am

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, கோவில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்களை இருந்த பணத்தை திருடுவதற்காக நோட்டமிட்ட தென்காசி சேர்ந்த சுந்தர் என்பவர் உண்டியலில் இருந்து ரூ.300 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதில் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் செக்யூரிட்டிகள் சுந்தரை பிடித்து மலை அடிவாரத்தில் உள்ள அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உண்டியலில் பணம் திருடியதாக சுந்தரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!