‘எனக்கே விபூதி அடிச்சிட்டல்ல’… மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் துரைமுருகன்.. திடீரென கரன்ட் கட்டானதால் அப்செட்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
13 September 2022, 11:56 am
Quick Share

வேலூர் : மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் அப்செட்டானார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மின்வெட்டும் தமிழகத்தில் அடியெடுத்து வைத்து விட்டது. அதிமுக ஆட்சியில் இல்லாத மின்வெட்டு, திமுக ஆட்சியில் தென்பட்டு வருவதால், மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அரசியல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதேவேளையில், தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் விளக்கம் கொடுத்து வருகிறார்.

இப்படியிருக்கையில், சீனியர் அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன், மின்வெட்டினால் பொதுமேடையில் பாதிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த அவர், தான் படித்த பள்ளி பற்றியும், பள்ளி கால அனுபவங்களையும் மேடையில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பேசத் தொடங்கிய உடனே திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், என்ன செய்வது என்பது புரியாமல், ‘என்ன ஆச்சு’ என்று கேட்டார்.

அதற்கு மேடையில் இருந்தவர்கள், கரன்ட் போய் விட்டது என்று கூறியதால், என்ன செய்வது என்றே தெரியாமல், பேச்சை நிறுத்தி விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது, அணில் குறுக்க மறுக்க ஓடிவிட்டதாகச் சொல்லி கலாய்த்து வருகின்றனர்.

Views: - 325

0

0