அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாச்சே.. புலம்பும் பெண் அரசியல்வாதி : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 4:46 pm
Vijayadhara
Quick Share

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாச்சே.. புலம்பும் பெண் அரசியல்வாதி : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றன. இதனால் தேர்தல் களம் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆனால் பெண் அரசியல்வாதியான விஜயதாரணி சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.

காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கும், விளவங்கோடு தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது . அதில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இதுபோன்று, விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட நந்தினி என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி பெயர் அறிவிப்பில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி தொகுதியை விஜயதரணி கேட்டு வந்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியது.

சரி விளவங்கோடு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் நந்தினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விஜயதரணி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 123

0

0