இயற்கை AC.. ஏர் கூலருடன் வலம் வரும் ஆட்டோ : கானல் நீரான காவலர் கனவு… காக்கிச்சட்டையுடன் மாஸ் காட்டும் மதுரைக்காரர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 5:13 pm
Auto Driver
Quick Share

இயற்கை AC.. ஏர் கூலருடன் வலம் வரும் ஆட்டோ : கானல் நீரான காவலர் கனவு… காக்கிச்சட்டையுடன் மாஸ் காட்டும் மதுரைக்காரர்!!

இன்றைய அவசர உலகில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்வது
வாடிக்கையாக இருக்கக்கூடிய வேளையில் ஆட்டோ கார் பேருந்து ரயில் விமானம் என எத்தனை இருந்தாலும் சட்டென்று நம்முடைய நினைவுக்கு வருவது ஆட்டோ தான்.

இந்த நிலையில் மதுரை பிரிட்டானியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தான் ரத்னவேல் பாண்டியன்.

மதுரை பெத்தானியபுரம் அண்ணா மெயின் வீதியை அடுத்த இ.பி.காலனியில வசித்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இளம் வயதில் காவலராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது
தந்தை ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் உடன்பிறந்த சகோதரர்களின் காவல்துறையில் பணியாற்றி வரக்கூடிய நிலையில், தானும் காக்கிச்சட்டை உடை அணிந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் சூழ்நிலையில் காவல்துறையினரின் காக்கி சட்டை தான் அணிய முடியவில்லை ஆட்டோ ஓட்டினால் கூட காக்கிச்சட்டை அணியலாமே என்று தாயாரின் ஆலோசனைப்படி இறுதி நாட்களில் ஓய்வு கிடைக்கும் போது ஆட்டோ ஓட்டுகிறார்.

டிப்ளமோ பட்டதாரியான இவர் மதுரையில் பிரபல தனியார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

குறிப்பாக ஆட்டோ ஓட்டும்போது சாலைகளில் இருக்கக்கூடிய வெப்பத்தின் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விரைவில் சோர்வு அடையக்கூடிய ஒரு நிலை இருந்து வரக்கூடிய வேலையில் இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று எண்ணிய இவர், முதல் கட்டமாக தற்போது ஆட்டோவை இயக்கும்போது தனக்கு குளிர்ந்த காற்று வரக்கூடிய வகையில் மிக எளிதாக பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு ஒரு சாதனம் ஒன்றை உருவாக்கி தனது ஆட்டோவில் பொருத்தி இருக்கிறார்.

அதாவது கிட்டத்தட்ட இரண்டு அடி உயரம் கொண்டுள்ள மூன்று இன்ஞ் பைப் மற்றும் இரண்டு இன்ஞ் படைப்புகளை வைத்து 300 மில்லி தண்ணீர் பிடிக்கக் கூடிய வகையில் அதை தயார் செய்து இருக்கிறார்

ஆட்டோவின் வேகத்திற்கு ஏற்றவாறு காற்று உள்ளே வரும்போது பைப் வழியாக தண்ணீர் ஆவியாகும் போது குளிர்ந்த காற்று ஆட்டோ ஓட்டுநர் மீது வீசும்

குறிப்பாக சமீப காலமாக காற்று மாசுபடுதல் அதிகமாக உள்ள நிலையில் காற்றில் இருக்கக்கூடிய மாசு இந்த குழாய் வழியாக வரும்போது தண்ணீரில் கலந்து அதில் இருக்கக்கூடிய தூசுகள் கீழே இருக்கக்கூடிய பகுதியில் தேங்கி விடக் கூடிய ஒரு நிலை இருந்து வருகிறது

இது குறித்து அவர் நம்மிடையே பேசுகையில், அப்பா ஈஸ்வரன் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு தம்பி இருவரும் போலீஸ் என குடும்பத்தில் உள்ளவர்கள் காக்கி உடையில் மக்கள் சேவை செய்வதால் தானும் காக்கி உடையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ டிரைவராக இருந்து வருவதாகவும் வரும் காலங்களில் ஆட்டோவில் பயணிக்க கூடிய பயணிகளுக்கும் இதேபோன்று குளிர்ந்த காற்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது இதில் குளிர்ந்த காற்று வீசுவதால் இதற்கு 30 கிலோமீட்டர் ஏசி என்று பெயர் வைத்துள்ளதாகவும்

வாகனம் அதிகமாக வேகத்தில் செல்லும்போது அதிகப்படியான காற்று வருவதால் இதை ஒரு வேகக் கட்டுப்பாடு கருவியாகவும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்

அதேபோன்று தனது ஆட்டோ பில் பயணிக்கும் பயணிகள் உட்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட இதை ஆச்சரியமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்

பொதுவாகவே அரசியல் மட்டுமல்ல பண்பாடு திருவிழா உணவுப் பழக்க வழக்கங்கள் இப்படி ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் மதுரையின் பக்கம் இருந்து வரக்கூடிய வேளையில் தற்போது இந்த ஆட்டோக்காரரின் பார்வையும் சக ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு பெற்று இருக்கிறது என்று சொல்லலாம்

Views: - 207

0

0